பழனி பேருந்து நிலையம் எதிரே இந்து அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

பழனி மத்தியபேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் இந்து முன்னனி மற்றும் இந்து வழக்கறிஞர் முன்னனணி தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் மாநிலசெயலாளர் முத்துக்குமார் தலைமையில் இந்து அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பழனிமலை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிதிருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12ஆண்டுகளுக்கு மேலாகியும் நிர்வாகம் கும்பாபிஷேகம் நடத்த முன்வராததால் பக்தர்களுக்கு தீங்குவர வாய்ப்புள்ளது என்றும் கோவில் திருப்பணி செய்ய வலியுறுத்தியும், பழனிஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி 3வது உற்சவர் சிலை செய்த மோசடி வழக்கில் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைத்ததை கண்டித்தும், பழனியைஆண்டவனை தரிசிக்க வரும் பக்தர்கள் குளிப்பதற்காக 400ஹெக்டேர் பரப்பில் குளத்தை வெட்டிவைத்தார்.  ஆனால் அக்குளத்தில சாக்கடைநீர், குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கலந்து பழனி நகரமே துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில். மாவட்டதலைவர் ஜெகன்,மாவட்ட செயலாளர் பாலு,  இந்து  முன்னனணி மாநிலபொது செயலாளர் கார்த்திக் வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!