பழனியில் பனைத் தொழிலாளர்களுக்கு மதுவிலக்கு போலீசார் ஆலோசனைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது..
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் ஆயிரக்கணக்கான பனை மரங்களில் தொழிலாளர்கள் பதநீர் இறக்கும் தொழில் மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பழனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை டிஎஸ்பி முருகன் தலைமையில் பதநீர் இறக்கும் தொழிலுக்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் உரிமம் பெற்றவர்கள் பின்பற்றும் வழிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். விதிமுறைகளை மீறும் தொழிலாளர்கள் மீது காவல்துறை எடுக்கும் சட்ட நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தார். அனைத்து தொழிலாளர்கள் உரிமம் பெறுவதற்கான அனைத்து உதவிகளும் மதுவிலக்கு காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். பின்னர் அனைத்து தொழிலாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் லாவண்யா உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.