பழனியில் பேன்சி கடைக்காரர் மகள் அப்சரா 592 மதிப்பெண் பெற்று சாதனை! நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார்.
பழனி நெய்க்காரப்பட்டி கிராமத்தில் செயல்படும் பி.ஆர்.ஜி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவி அப்சரா நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும், மொத்தமாக 592 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் 96 மதிப்பெண்களும் பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு ஆகிய நான்கு பாட பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்துள்ளார். அப்சராவின் தந்தை அப்பாஸ் பழனியில் சிறிய அளவில் பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். அப்பாஸுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடைசி பெண் குழந்தையான அப்சரா பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றுள்ளார். இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளியில் பயின்று வரும் அப்சரா தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 592 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளது பெருமையாக உள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
பழநி- ரியாஸ்
You must be logged in to post a comment.