திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகிற 21.01.2019 அன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு, சக்திவேல் அவர்களின் உத்தரவுரவின்படி பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 54 இடங்களில் காவல் உதவி
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது ய. இம்மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி மையங்களில் கோவிலுக்கு செல்லும் வழி, பேருந்து நிலையம் செல்லும் வழி குறிப்பிடபட்டுள்ளது. பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையில் நடந்து செல்லும் போது பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரியும் வகையில் பக்தர்களுக்கு கையில் ஒளிரும் பட்டைகள் அனைத்து பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற செயல்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இம்மையங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தைப்பூசத் திருவிழாவினை பாதுகாப்புடன் கொண்டாட திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









