பழனி முருகன் கோவிலுக்கு மாவட்ட நீதிபதி என கூறி சாமி தரிசனம் செய்ய வந்த போலி நீதிபதியை பழனி நீதிமன்ற ஊழியர்கள் புகாரின் அடிப்படையில் அடிவாரம் போலீசார் கைது செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறையினர் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அமைச்சர்கள் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது இதனை பயன்படுத்தி தர்மபுரியை சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் (53) எம்.ஏ படித்த இவர் தான் மாவட்ட நீதிபதி என்றும் இவரே திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு தான் பழனி மலை கோவிலில் சாமி தரிசனம் வருகை செய்ய வருவதாகவும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யுமாறும் கூறியுள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் நீதிமன்ற ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து மூன்று நபர்களுடன் வருகை தந்து போது பழனியை சேர்ந்த நீதிமன்ற ஊழியர்கள் தரிசனம் செய்வதற்கு முன்னுரிமை அனுமதி வாங்க வேண்டும் என்றும் அதற்கு தங்களின் அடையாள அட்டையை கேட்பதாக கூறியுள்ளனர். அதற்கு முன்னுக்கு பின் முரணாக பேசியதில் நீதிமன்ற ஊழியர்கள் சந்தேகமடைந்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அடிவாரம் போலிசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி நடத்தியதில், தர்மபுரியில் எங்கு பணிபுரிகிறீர்கள் என்று கேட்டதற்கு நான் இப்போது தர்மபுரியில் பணியில் இல்லை என்றும் ,தன்னை தேர்தலுக்காக சேலத்திற்கு மாற்றம் செய்துள்ளதாக கூறியதாக விசாரணையில் தெரியவந்தததையடுத்து இவர் நீதிபதி இல்லை என்றும் ,இவர் சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்டு வருவதும் ,போலியாக மாவட்ட நீதிபதி என்ற பெயரை பயன்படுத்தி இது போல பலமுறை தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்றிருப்பதும் , தேனி மாவட்டம் தேவதான பட்டியில் உள்ள மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவிலுக்கும், திண்டுக்கல் அருகே உள்ள இராமலிங்க பட்டியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு சென்று விட்டு மாலை மரியாதைகளுடன் வந்துள்ளார். இதன் அடிப்படையில் போலி நீதிபதி ரமேஷ்பாபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சைரன் வைத்த காருடன் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
பழநி- ரியாஸ்.
You must be logged in to post a comment.