பழனியில் 33 வார்டுகள் உள்ளன. அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறரார்கள். ஆனால், இந்த ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும், தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தெரு நாய்கள் மக்களை கடிக்கும் அபாயம் தெருக்களில் போவோர் வருவோரைத் துரத்துகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கும், எதிர்பாராத விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
பல இடங்களில், பொது மக்கள் நாய்க்கடிக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் இந்த தெரு நாய்கள் விட்டு வைப்பதில்லை. இதனால், சாலையில் செல்லவே, பள்ளி சிறுவர், சிறுமியர் பயந்து போய் உள்ளனர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களின் கோரிக்கை வைக்கின்றனர்
பழனி செய்தியாளர்:- ரியாஸ்
You must be logged in to post a comment.