தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, சிறப்பு மருத்துவ முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும், மருத்துவ முகாம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட சத்துணவு உணவு பொருட்களின் விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் அரசு மக்களைத்தேடி கிராமப்புறங்களுக்கு சென்று மருத்துவ முகாம் உள்ளிட்ட பொது மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011ம் ஆண்டு முதலமைச்சாராக பொறுப்பேற்றவுடன் சுகாதாரத்துறை மூலம் கிராமப்புறங்களிலுள்ள பொது மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அறிவித்தார்கள்.தமிழகத்தில் பொருளாதாரம் உயர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், அதிகமாக மாணவ, மாணவியர்கள் கல்வி கற்கும் போது வேலைவாய்ப்பு அதிகரிக்கச் செய்யும் அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் உயரச் செய்வதோடு தமிழகத்தின் பொருளாதாரம் உயர வழிவகை செய்யும் என்பதை கருத்தில் கொண்டு, பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்தார்கள்.
பள்ளி கல்வித்துறைக்கு அடுத்தப்படியாக பொது மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் சுகாதாரத்துறைக்கு பல்வேறு தொழில் நுட்ப சிகிச்சை கருவிகள் வாங்குவதற்கும், சிகிச்சை மேற்கொள்வதற்காகவும் அதிக நிதி ஒதுக்கீடு செய்தார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தென்மாவட்டங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள்.இதனை நிறைவேற்றும் விதமாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசின் மூலம் தென்மாவட்டமான மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க மேற்கொண்டதின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. மேலும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 3 கட்டமாக உதவித்தொகை ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மேலும், பிறந்த குழந்தைகளுக்கு தேவையான தரமான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தைகள் பரிசு பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அம்மாவின் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற புரட்த்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில் 2 ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்கள். அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் தொகுதி சிவஞானபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ளது. எனவே, தங்கள் பகுதியில் நடைபெறும் இது போன்ற மருத்துவமுகாமில் பொது மக்கள், தாய்மார்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேலும், மருத்துவ முகாமில் மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என அமைச்சர் பேசினார்.
அதனை தொடாந்து, 2 குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தையும்,1 கர்ப்பினி தாய்மாருக்கு அம்மா ஊட்டசத்து பெட்டகத்தையும் வழங்கினார்.மேலும், வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நட்டினார்.
முன்னதாக விளாத்திக்குளமம் பகுதி மக்கள் அளித்த நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அவர்கள், ஆகியோர் முன்னிலையில், அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ விளாத்திக்குளம் பேரூந்து நிலையத்தில் மந்திக்குளம் வழியாகச் செல்லும், விளாத்திக்குளம் – முத்துகுமரபுரம் பேரூந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) பரிதா ஷெரின், கோவில்பட்டி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோராஜா, துணை இயக்குநர் (தொழுநோய்) யமுனா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், வட்டார மருத்துவ அலுவலர் இன்பராஜா,பள்ளி தலைமையாசிரியர் கஜேந்திரபாபு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









