தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகர பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு விறைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் பாலக்கோடிலிருந்து சென்னைக்கு 2 சொகுசு பேருந்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது :-மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின்; சார்பில் பாலக்கோடிலிருந்து சென்னைக்கும் மற்றும் சென்னையிலிருந்து பாலக்கோடிற்கும் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் 2 வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இன்று முதல் இயக்கப்படுகிறது.பாலக்கோடு நகர பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு விறைவுப் போக்குவரத்து கழகம் ஓசூர் பணிமணையின் சார்பில் தடம் எண்.424 பாலக்கோடு முதல் காரிமங்கலம், காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சென்னை வரை செல்லும் ஒரு பேருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது. மேலும் இப்பேருந்தில் 2ூ1 இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து 15 படுக்கை வசதி மற்றும் 31 சொகுசு இருக்கை வசதி, அலைபேசி சார்ஜர் வசதி, படுக்கை வசதியில் மின் விசிறி வசதி, மகிழுந்தில் உள்ளதை போல் சொகுசு இருக்கை வசதி ஆகிய வசதிகள் உள்ளது. இப்பேருந்து பாலக்கோடிலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் மற்றும் சென்னையிலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும். இப்பேருந்து வெள்ளி, சனி, ஞாயிறு படுக்கை வசதி கட்டணம் ரூ.485 இதர நாட்களில் ரூ.415 ஆகும்.
பஞ்சப்பள்ளி முதல் பாலக்கோடு வழியாக சென்னைக்கும், மாரண்டஅள்ளியிலிருந்து பாலக்கோடு வழியாக சென்னைக்கும் பேருந்து சென்று வருகிறது. விரைவில் தருமபுரியிலிருந்து குளிர்சாதன வசதியுடன் கூடிய 4 பேருந்துகள் இயக்கப்படும். தருமபுரி அரசு போக்குவரத்து சார்பில் 506 பேருந்துகள், 336 புதிய பேருந்துகள் ஓராண்டில் மாற்றப்பட்டுள்ளது. 66 சதவிகித பேருந்துகள் புதிய பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பேருந்துகள் இந்தாண்டில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பாலக்கோடு பேரூராட்சியும் வணிகர் சங்கமும் இணைந்து ரூ.12 இலட்சம் மதிப்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாலக்கோடு தொகுதி வளர்ச்சிக்காக தொடர்ந்து வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் .மு.நாகராஜன், முன்னாள் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.அரங்கநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் .கோபால், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சங்கர்,வீரமணி, துணை மேலாளர்கள் சிவமணி, ஜெயபாலு, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், கிளை மேலாளர்.முனிராஜ், ஆகியோர் உள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









