தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள செம்ம நத்தம் பகுதியில் மாந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக பாலக்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூதாடிய அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர் .இதில் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். 7 பேர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வேலாவள்ளி பகுதியை சேர்ந்த வேட்ராயன் 38. மகேந்திரன் 30.அருள் 29.குமார் 43.சக்கரவர்த்தி 38.கோபிகுமார் 24. பாப்பாரப்பட்டி சேர்ந்த சபாபதி 70 ஆகியோர் என்பது தெரியவந்தது .இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் 5 மோட்டார் சைக்கிள் ரூ 12,500 ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்


You must be logged in to post a comment.