தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் வருவாய் வட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில், 1233 பயனாளிகளுக்கு ரூ.8.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் தருமபுரி மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதில் இலவச வீட்டு மனைப்பட்டா இலவச வீடு முதியோர் ஓய்வூதியம் மலைவாழ் பழங்குடியினர் சாதிச் சான்று குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறுவகையான கோரிக்கைகளை பொதுமக்கள் மனு கொடுத்திருந்தனர்.
இந்த சேர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள நபர்களை பயனாளிகளாக தேர்வு செய்துள்ளனர். இதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முதல்கட்டமாக பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் இலவச வீட்டுமனைப்பட்டா இலவச வீடுகள் மலைவாழ் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் அம்மா இரு சக்கர வாகனம் வேளாண் உபகரணங்கள் என பல்வேறு துறைகளின் சார்பில் 1233 பயனாளிகளுக்கு 8 கோடியே 19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் எஸ் மலர்விழி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மாவட்ட வருவாய் அலுவலர் ராமத்துல்லா கான், பாலக்கோடு பேரூராட்சி துணை் தலைவர் சங்கர்.பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் தொ.மு.நாகரான், முன்னாள் சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்க தலைவர் ரங்கநாதன், தாசில்தார் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









