கீழக்கரை ஏர்வாடியில் பாகிஸ்தான் நாட்டவர் கைது…

இந்திய பிரதமர் நரேந்திரமோடி வரும் 27ம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபம் திறக்க மதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு வருகை தர உள்ளார். அதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இச்சோதனையில் ஏர்வாடியில் முகம்மது யூனுஸ் (65 வயது) எனும் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவர் எந்த ஆவணமும் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

ஆவணம் இல்லாமல் தங்கியிருந்த அந்நபர் இலங்கை வழியாக ஏர்வாடி வந்து சேர்ந்துள்ளார் என்று அறியப்படுகிறது. மேலும் அந்நபரை மீண்டும் கள்ள தோணி வழியாக திரும்பி செல்ல உதவியாக இருந்த இரண்டு நபர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!