விக்கிரமங்கலம் அருகே புயல் மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்கதிர்கள் சேதம்ம.மதுரை விக்கிரமங்கலம் அடுத்துள்ள அய்யனார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ ஆண்டிபட்டி கிராமத்தில் திருமங்கலம் பாசன கால்வாய் 98-வது மடையில் சுமார் 250 ஏக்கர் நெல் விவசாயம் செய்து உள்ளனர் இதில்150 ஏக்கருக்கு மேல்

நெல்விளைச்சல் ஆகும் முன்பு தற்போது வீசிய புயல் சூறாவளி காற்று மழையால் நெற்கதிர் பால் பிடிக்காமல் வயலில் சாய்ந்து விட்டது இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது,இப்பகுதி விவசாயிகள் கூறும் பொழுது நாங்கள் ஏக்கருக்கு ஆயிரக்கணத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளோம் வருகிற தை மாதம் பத்தாம் தேதிக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெல் பால் பிடிக்கும் நேரத்தில் தற்போது புயல் காற்றால் சூறாவளி காற்றில் மழையில் விவசாய நிலத்தில் உள்ள அனைத்து பயிர்கள் சாய்ந்து விட்டன இதனால் நெல் விளைச்சல் இல்லாமல் சாய்ந்ததால் அனைத்தும் அழுகி மீண்டும் விளைச்சல் ஆகாத நிலையில் சேதம் அடைந்துள்ளது இதனால் எங்களுக்கு முழுமையான சேதம் அடைந்துள்ளோம்,அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்





You must be logged in to post a comment.