ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டியில் உள்ள மகாசக்திபுரம் பகுதியில், அருள்மிகு கடல் சூழ்ந்த மாரியம்மன் திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழா மற்றும் கங்காதேவி பொங்கல் விழாவை முன்னிட்டு பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டி 16 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பகுதியில் நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடத்தப்பட்டது.
இப்போட்டியில் மொத்தம் 25 படகுகள் பங்கேற்றன. மதியம் 2 மணிக்குத் தொடங்கிய போட்டி மாலை வரை நீடித்தது. போட்டியின் முடிவில், முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் பணமும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டன.
கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு இப்போட்டியைக் கண்டுகளித்தனர்.
You must be logged in to post a comment.