பெண்களை ஆசை வார்த்தை கூறிஆபாச படம் பிடித்து மிரட்டி வந்த அரசு ஊழியர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஸ்டேட் பாங்க் காலணி பகுதியைச் சார்ந்தவர் சத்தியன் 51..அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து பெண்களிடம் நட்பாக பழகி ஆசை வார்த்தை கூறி, வீட்டிற்கு வரவழைத்து ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவை சம்மந்தமாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் சத்தியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சத்தியன்பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்தது தெரிய வந்தது

சாதிக் பாட்சா, நிருபர் , தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!