நெல்லையில் தமுமுக சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO WATER PURIFIER) மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது. திருநெல்வேலி பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டபம் (ஆர்யாஸ் கல்யாண மண்டபத்தில்) இயங்கிவரும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நீண்ட நாட்களாக இல்லாமல் இருந்தது. இதை தொடர்ந்து நெல்லை டவுன் நகர தமுமுக சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO WATER) மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் இரவு உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நெல்லை டவுன் நகரத் தலைவர் முஹம்மது ஷாலி தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட தலைவர் கே.எஸ். ரசூல் மைதீன் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கி துவங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் கோல்டன் காஜா இரவு உணவு வழங்கி துவங்கி வைத்தார். மமக இளைஞர் அணி மாநில பொருளாளர் ரியாசூர் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் பாளை ஏ.சி. செய்யது அலி, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் பாசில், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சேக்மதார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நெல்லை நகர நிர்வாகிகள் அப்துல்லாஹ், நாகூர் மைதீன், அப்துல் காதர் மற்றும் மதார், பாளை கிளை தலைவர் ஜாபர் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









