கடந்த பல வருடங்களாக விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் உண்ணும் உணவு முதல் குடிக்கும் நீர் வரை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை இந்திய சந்தையில் இந்திய பெயரில் வெற்றிகரமாக சந்தைப்படுத்தினர். உதாரணமாக சூர்யக்காந்தி எண்ணை, ஓட்ஸ், நூடுல்ஸ் போன்ற இந்திய நாட்டிற்கு பழக்கமே இல்லாத உணவுகளை கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் சந்தைபடுத்தி ஓரளவு மக்களை அவ்வுணவு பழக்கத்திற்கு அடிமையும் படுத்தினர். ஆனால் போலி சாயம் கடந்த சில வருடமாக இயற்கை உணவு விழிப்புணர்வு அடைந்த பொழுது வெளுக்கத் தொடங்கிவிட்டது.

சமீப காலமாக மீண்டும் மக்கள் மூதாதையார்களின் இயற்கை உணவின் பக்கம் திரும்பிய வண்ணம் உள்ளனர். அதனின் அசூர வளர்ச்சி சமீப காலத்தில் Organic Store என்ற பெயரில் பல இடங்களில் முளைத்து இருக்கும் இயற்கை காய்கறி மற்றும் உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள், ஆனால் அதிலும் வியாபார நோக்குடன் கலப்படம் செய்து விற்பனை செய்வதுதான் மிகவும் வேதனையான விசயம்.

இந்த போலியான வியாபாரிகளிடம் இருந்து காக்கும் வண்ணம், மக்களுக்கு தரமான சமயல் எண்ணை வழங்க வேண்டும் எற்ற நோக்கத்தில் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த அபுதாஹிர் மற்றும் சலீம் ஆகியோர் இயற்கை முறையில் செக்கு மூலம் தயாரிக்கப்படும் நல்லெண்ணை, கடலை எண்ணை மற்றும் தேங்காய் எண்ணை ஆகியவற்றை சந்தைப்படுத்தும் நோக்கத்தோடு SMB மரச் செக்கு எண்ணை என்ற பெயரில் வரும் 02-06-2017 முதல் கீழக்கரையில் சந்தைப்படுத்த உள்ளார்கள்.

இவ்வகை எண்ணை பாரம்பரிய முறைப்படி செக்கு மற்றும் உலக்கை இரண்டும், வாகை மரத்தினால் செய்யப்பட்டு மிகக் குறைந்த வேகத்தில் சுழன்று உயிர்ச் சத்துக்களும், தாதுக்களும் வைட்டமின்களும் அழியாமல் சுகாதாரமான முறையில் கருப்பட்டி கலந்துஉற்பத்தி செய்வதே மரச்செக்கு எண்ணையின் சிறப்பாகும். அறிமுகமாக விலையாக மரச்செக்கு நல்லெண்ணெய் விலை கீழ்கண்டவாறு அறிவித்துள்ளார்கள்.
Opening Offer
1 Ltr. Bottle – RS 300.00 Offer 100ml Free 1/2 Ltr. Bottle – RS 155.00 Offer 50ml Free
இந்த புதிய வியாபாரம் எல்லா வளங்களையும் பெற்று சிறக்க கீழை நியூஸ் வோர்ல்ட் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









