இராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமதாஸ் – அன்னக்கிளி தம்பதி. இவர்களுக்கு நான்கு குழந்தைகள். ராமதாஸ் கட்டட தொழிலாளி ( கொத்தனார்). இவரின் கடைசி மகன் விக்னேஸ்வரன், 21. இவர் டிப்ளமோ சிவில் முடித்துள்ளார். இந்நிலையில் பிப்., 2 ஆம் தேதி இரவு பட்டணம்காத்தான் புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் விக்னேஸ்வரன் தலையில் படு காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் விக்னேஸ்வரனை மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிரமான சிகிச்சை அளித்து வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் மட்டும் உள்ளது. உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளதாக டாக்டர்கள் கூறினர்.
இந்நிலை அறிந்த விக்னேஸ்வரன் தந்தை ராமதாஸ், தனது மனதை திடப்படுத்தி கொண்டு மகன் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை மூளைச்சாவு நிலையில் உள்ளான் என்பதை உணர்ந்து தனது மகனின் உடல் உறுப்புகள் மற்றவர்களின் உயிரை காக்க உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் விக்னேஸ்வரனின் இதயம் , கண், கல்லீரல், சீறுநீரகம் ஆகிய உறுப்புகளை எடுத்து ஆறு பேருக்கு உடல் உறுப்பு தானம் அளிக்கப்பட்டது. இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். தனது மகன் உயிர் பிரிந்தாலும் உயிருக்காக போராடும் ஆறு பேரின் உயிர்களில் தனது மகன் வாழ்வதை பெரிதாக எண்ணிய ராமதாஸின் எண்ணம், செயலை அறிந்து பெருமிதம் அடைந்தனர்.
உடல் உறுப்புகள் தானம் செய்து 6 பேர் உயிர் காக்க உதவிய ராமதாஸ் பெருந்தன்மையை பாராட்டும் விதமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் விக்னேஸ்வரன் ஆறு நாள் சிகிச்சை செலவு, விக்கினேஸ்வரனின் உடலை இராமநாதபுரம் கொண்டு வந்து தகனம் உள்ளிட்ட அனைத்து செலவுகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. படிப்பறிவில்லா ராமதாஸ் போன்றோர் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு பெற்று இருப்பதே பாராட்டுக்குரியது. தனது மகன் உடல் உறுப்புகளை தானம் பெற்றுக் கொண்டவர்கள் மூலம் ராமதாஸ், தனது மகன் வாழ்வதாக அவர்களுடன் 2 நாள் தங்கிய ராமதாஸ் உணர்ச்சி பெருக்குடன் தெரிவித்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












