கைலாசபட்டி கோவில் பூசாரி தற்கொலை விவகாரம் – ஓ.பி.எஸ். தம்பி மீதான வழக்கில் 6 பேர் விடுதலை..
தேனி, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலர் ஓ.ராஜா உட்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். 4 தடயங்கள், சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் *இன்று திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ஒ.ராஜா உள்பட 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
You must be logged in to post a comment.