இராமநாதபுரம், ஆக.22 – மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்திய கூட்டணி கட்சிகள் சார்பில் வராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டதலைவர் வருசை முஹமது தலைமை வகித்தார். காங்கிரஸ் நகர் தலைவர் கோபி, மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூ நகர் செயலாளர் களஞ்சியம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் செயலாளர் சிராஜிதீன், மனித நேய மக்கள் கட்சி நகர் செயலாளர் முஹமது தாஜிதீன், விசிக நகர் செயலாளர் செய்யது அபுதாஹீர்்ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான், நகர்மன்ற தலைவர் கார்மேகம், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாததுரை, இந்திய கம்யூ. மாநில குழு உறுப்பினர் ராஜன், விசிக மாவட்ட செயலாளர் அற்புதக்குமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பேசினர். காங் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் இப்ராஹீம், மகிளா காங் மாவட்ட தலைவர் ராமலட்சுமி, ஏஐடியுசி மீனவர் அணி மாநில செயலாளர் செந்தில் வேல், விசிக திருவாடானை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பழனிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மதத்தை வைத்து மக்களை பிளவு படுத்தல், மணிப்பூர், ஹரியானா மாநில கலவரங்களை தூண்டுதல், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறைகளை எதிர்கட்சிகளை பழிவாங்க பயன்படுத்துதல், நாடாளுமன்ற ஜனநாயத்தை சீரழிக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









