பசுவின் பெயரால் கொல்லப்படும் அப்பாவி மக்கள் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் ??..

நாடு முழுவதும் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த முஸ்லிம்களும், தலித்களும் பசு குண்டர்களால் பசுவின் காவலர்கள் என்ற பெயரில் இந்து சமுதாயத்தின் போர்வையில், இஸ்லாமிய-இந்து சமுதாய ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்தியா முழுவதும் பல கொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் ராஜாஸ்தான் மாநிலத்தின் அல்வார் கிராமத்தை சார்ந்த ரக்பர் கான், பசு குண்டர்களால் கும்பலாக அடித்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜாதி, மதம் என்ற எல்லையை தாண்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதில்  ஆதரிக்கும் ரீதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், மனிதாபிமான ரீதியில் சிவசேனா அமைப்பும் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.   ஆனால் மத்திய அரசு எந்த கண்டனத்திற்கும் செவி சாய்க்காமல் மவுனத்தையே கடைபிடிக்கிறது. அப்பதிவில் சில உங்கள் பார்வைக்கு:-

மோடியின் காட்டுமிராண்டித்தனமான புதிய இந்தியா இதுதானா? – ராகுல் காந்தி.

இந்திய முஸ்லிம்கள் வாழ்வதற்கு உரிமை இல்லை ஆனால் பசுக்களுக்கு உண்டு – அசாதுத்தின் ஒவைஸி.

மக்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்திவிட்டால் அடித்து கொல்லப்படுவது நிறுத்தப்படும் – இந்திரேஷ் குமார், ஆர்.எஸ்.எஸ் தலைவர்.

பசுவை காக்கிறோம் என்ற பெயரில் மக்கள் கொல்லப்படுவது இந்துத்துவாவிற்கு எதிரானது –சிவ சேனா கட்சி.

இந்தியாவில் முஸ்லிம்களை விட பசுக்கள் பாதுகாப்பாக உள்ளது – சசி தரூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!