ராமநாதபுரம் மாவட்டம் பட்டின காத்தான் பகுதியில் திருச்சி செல்லும் இ சி ஆர் சாலை அருகே கேண்டி கஃபே மற்றும் கேண்டி ஆட்டோ மொபைல் சர்வீஸ் திறப்பு விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான் தலைமையில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் அபுதாஹிர் ஃபைஜி , முகம்மது அபூபக்கர், ஹசன், ஆரிஃப் , அஹமது அப்துல் காதர் , சேக் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நான்காம் தமிழ்ச் சங்கம் தலைவர் நாகேந்திர சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் கட் பண்ணி திறந்து வைத்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் முகம்மது பைசல் அனைவரையும் வரவேற்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் நெய்னா முகம்மது , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைச் செயலாளர் அப்துல் ஜப்பார் , மாவட்ட தலைவர் வருசை முகம்மது மற்றும் திமுக கழக நிர்வாகிகள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.






You must be logged in to post a comment.