இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் இருமேனி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டட திறப்பு விழா இன்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ திறந்து வைத்தார். மண்டபம் வட்டார வளர்ச்சி ஆணையர் சோமசுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷங்கர பாண்டியன், ஊராட்சி தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் ஐனுல் அரபியா, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், ஊராட்சி தலைவர்கள் கார் மேகம் (என்மனம் கொண்டான்), காமில் உசேன் (புதுமடம்), பரமேஸ்வரி பத்மநாதன் (மானாங்குடி), உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கார்த்திக், ஊராட்சி செயலாளர் முனியாண்டி, ஒப்பந்தகாரர் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.