இராமநாதபுரத்தில் அறிவுசார் மையம் திறப்பு விழா

இராமநாதபுரம் நகராட்சியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் 2535 எண்ணம் புத்தகங்கள், வாசிப்புக்கூடம், கணினி மையம், குழந்தைகள் வாசிப்பு கூடம், ஸ்மார்ட் வகுப்பறை, கழிப்பறைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர், ஜெனரேட்டர், தோட்டங்கள் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர்.இந்நிகழ்ச்சியில் மண்டல செயற்பொறியாளர் மனோகரன், இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம் , இராமநாதபுரம் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், இராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் , நகராட்சி செயற்பொறியாளர் ரங்கராசு , நகர் நல அலுவலர் ரெத்தின குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!