பிறவி குறைபாடு நோய் சிகிச்சை மையம் திறப்பு..

பிறவிக்குறைபாடு செவித்திறன் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு, கண் பார்வை குறைபாடு, பிறவி இருதய குறைபாடு தேசிய சுகாதார இயக்கம் மூலம் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத பிறவி இருதய குறைபாடுகள், பிறவி குடல் நோய் குறைபாடு ஆரம்பத்திலேயே கண்டறிந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உயர்நிலை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை இங்குள்ள டாக்டர்களால் பின்பற்றப்படுகிறது.

இந்நோய்கள் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் கட்டடம் ரூ 1 கோடி மதிப்பில் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் இம்மையத்தில் குழந்தை நலம், பல் மருத்துவம், பிசியோதெரபி, பேச்சுப்பயிற்சி, மன நலம் , கண் பார்வை பரிசோதனை, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை கண்டறிந்து ஆய்வக பரிசோதனை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம்மைய கட்டடத்தை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார். இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் குத்து விளக்கேற்றினார்.

மாவட்ட சுகாதார பணிகள் நல இணை இயக்குநர் முல்லைக்கொடி , பொது சுகாதார இணை இயக்குநர் சோமசுந்தரம், நலப்பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் , மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால், மூத்த டாக்டர் கருப்பசாமி, பொதுப்பணி துறை (மருத்துவ துறை கட்டுமானம்) உதவி செயற்பொறியாளர் ஜெயதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!