கீழக்கரை “மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை” (MHCT) புதிய அலுவலக திறப்பு விழா..

மக்கள் பணி என்பது… மகேசனுக்கு செய்யும் பணி என்பதை உணர்ந்து செய்யும் பணியை சேவை மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செய்து வரும் குறிப்பிட்ட சில அமைப்புகளில் முக்கியமான அமைப்பு மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை (MHCT) ஆகும்.

கடந்த சில வருடங்களாக தற்காலிக அலுவலகத்தில் இயங்கி வந்த இந்த அறக்கட்ளை அலுவலகம்  நேற்று (04-06-2020) வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளிக்கிழமை இரவு மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை (MHCT) புதிய அலுவலக திறப்பு விழா மாலை நேர தொழுகைக்கு பிறகு  சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த நிகழ்வுக்கு முன்னாள் பொறுப்பாளர்கள் திறந்து வைத்தனர். மேலும் இந்நிகழ்வு மின் ஹாஜியார் பள்ளி மற்றும் கடற்கரை பள்ளி ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது.  அதே சமயம் இந்த நிகழ்வு  அரசாங்கம் விதித்த விதிகளுக்குட்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றி இவ்விழா சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!