இன்றைய நவீன உலகில் மருத்துவ ஆலோசனைகளை சமூக வலைதளத்தின் மூலம் பெறக்கூடிய மக்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக அமீரகத்தில் பணி புரியும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடி தீர்வை தேடி சமூக வலை தளத்தை நாடுபவர்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாகவும் தவறான நபர்களிடம் பாதுகாப்பை தேடுகிறார்கள் என்றும் எச்சரித்துள்ளார்கள்.

இது குறித்து டாக்டர். ஶ்ரீரிஹரி.கே.பிள்ளை கூறுகையில், கடந்த 4 வருடமாக அவரை அணுகும் நோயாளிகள் உடனடி நிவாரனத்தையே நாடுகிறார்கள், ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முறையான மருத்துவம் மட்டுமே நீண்ட கால நிவாரணத்துக்கு ஏதுவாக அமையும் என்று கூறியுள்ளார்.

தற்போதய அதீநவீன யுகத்தில் வலைதளத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் போதும் ஒரு பொருளை குறித்து லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் கருத்துகளையும், அறிவுரைகளையும் பெற முடிகிறது, ஆனால் அவையெல்லாம் உண்மையென்று எண்ணி மருத்துவரை நாடாமல் மருந்துகளை உட்கொள்வது பல பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அவ்வாறு பிற நோயாளிகள் உட் கொள்ளும் மருந்துகள் மற்ற நோயளிகளுக்கு பொருந்தாது என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நியூ மெடிக்கல் செண்டரில் பணி புரியும் டாக்டர் கே.பிள்ளை அறிவுறுத்தியுள்ளார்.

சமூக வலை தளத்தில் சில நிறுவனங்களின் பக்கங்களுக்கு லட்சக்கணக்கான நபர்கள் தொடருவதால் (Followers), அதில் பதிவாகும் கருத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை எற்படுத்துகிறது.
இயற்கையாக, டீன் ஏஜ் பருவத்தை அடைந்தவர்கள் வெளித்தோற்றத்தை அழகாக வைத்து கொள்ள அதிக கவனம் செலுத்துவதால் பெற்றோர்கள் அவர்களை கண்கானித்து தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று டாக்டர்கள் கேட்டு கொள்கிறார்கள்.
வலை தளம் மூலம் பகிரப்படும் தகவல்கள் நொடி பொழுது மக்களை சென்றடைந்தாலும், அதனால் ஏற்படும் விபரீதங்கள் சில நேரங்களில் ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறி விடுகிறது என்பதை மனதில் கொண்டு சமுதாய உணர்வோடு செயல்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









