மொபைல் மூலம் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைனில் இணையதளம், டெலிகிராம் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட ஆன்ட்ராய்டு செயலி வாயிலாக முதலீடு எனும் பெயரில் பல்வேறு நிதி மோசடிகள் நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களான வாட்ஸப் மற்றும் டெலிகிராம் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் “உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்” இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வருகின்றனர்.
இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் கிரைம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. தற்போது பொருளாதார குற்றப்பிரிவு சார்பில், முதலீடு மோசடிகள் ( Investment Frauds ) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.