‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு!- கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் ‘ஒரே நாடு -ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.

இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக இதற்கு எதிர் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிராக முதல் மாநிலமாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டை தொடர்ந்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிராக கேரள சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கேரள சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் சார்பில் மாநில சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ராஜேஷ் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதன் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!