ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பெயரில் மக்களவை, சட்டப்பேரவை தொடர்பான மசோதா, யூனியன் பிரதேசங்கள் தொடர்பான மசோதா அறிமுகம்.
மக்களவை, மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதா வழி வகுக்கும்.
யூனியன் பிரதேச சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த இரண்டாவது மசோதா வழி வகுக்கும்.
மசோதாக்கள் நாடாளுமன்ற ஒப்புதலை பெற்றாலும் 10 ஆண்டுக்கு பிறகே நடைமுறைக்கு வர வாய்ப்பு.
2034ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு வியூகம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டு, கடந்த மார்ச்சில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை குழு சமர்ப்பித்தது.
You must be logged in to post a comment.