நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் முறையை கண்டித்து நீலகிரி மாவட்டம் பகுதியில் வணிகா் சங்கங்கள் சாா்பில் வியாபாரிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்
நீலகிரியில் இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, உதகையில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால், உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஊட்டிக்கு செல்லும் வாகனங்கள் வாரநாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், வாரம் இறுதி நாட்களில்
8 ஆயிரம் வாகனங்களும் அனுமதிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம்
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமுல்படுத்தி உள்ளது இ பாஸ் முறைக்கு தளர்வு கோரி நீலகிரி மாவட்ட வியாபாரிகள் மற்றும் உணவகங்கள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதன் எதிரொலியாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிஉள்ளனர் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரியும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் வணிகா் சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை முழு அடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
You must be logged in to post a comment.