திருச்சியில் இருந்து மணப்பாறை, வையம்பட்டி, அய்யலூர், வடமதுரை வழித்தடத்தில் திண்டுக்கல் வரை இயக்கப்படும் தனியார் பேருந்துகள் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்றவுடன் திருச்சி செல்லும் பயணிகள் மட்டுமே அபே ருந்திற்குள் ஏறவேண்டும் என்றும் இடையில் உள்ள ஊர்களுக்கு பயனிப்பவர்கள் ஓரமாக நின்று பேருந்து புறப்படும் போதுதான் ஏறவேண்டும் என்று வாய்மொழி உத்தரவிடுகிறார்கள்.
இதனால் இடைப்பட்ட ஊருக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதனால் வயோதிகர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டால் கட்டணம் வசூலிக்க வரும் நடத்துனர் செயல்பாடும், பேச்சும் மற்ற பயணிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
இவர்களின் இதுபோன்ற செயல்களால் திண்டுக்கல் – திருச்சிக்கு இடைப்பட்ட ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் முதியவர்கள், பெண்கள், மற்றும் குழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகின்றனர். இதைபயன்படுத்தி அரசு பேருந்துகள் பயணிகளிடம் தனியார் பேருந்துகளை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆகவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இரவு நேரங்களில் ஊர்போய்சேர முடியாமல் தவிக்கும் பயணிகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










