உலக முதியோர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட முதியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் பே. இராஜேந்திரன் விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில், “முதியோர்களை மதிப்பதும், அவர்களைக் காப்பதும் அவசியமானது என்பதை உணர்ந்த ஐக்கிய நாட்டு சபை 1990- ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் நாளை உலக முதியோர் நாளாக அறிவித்தது. அதன்படி 1991-ஆம் ஆண்டு முதல் அக்டோபர்-1 உலக முதியோர் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முதியோர்களின் அறிவு, அனுபவம் ஆகியவற்றை உணர்ந்து மதித்தல் இளைய சமுதாயத்தினருக்கு அவசியம் என்பதை எடுத்துச் சொல்லவும், முதியோர்கள் கௌரவமாகவும், சகல உரிமைகளோடும் வாழ்வதற்கு அவசியமான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதுமே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், முதியோர்களுக்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சில திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் சரியாக முதியோரிடம் வந்து சேரவும், முதியோர்களை காப்பது அவசியம் என்பதை உணர்த்தவும், அவர்களின் கௌரவமான வாழ்க்கைக்கு உறுதி செய்திடுவது அவசியம் எனவும் இந்த நாளில் அனைவரும் உறுதி கொள்வோம்.” இவ்வாறு நெல்லை மாவட்ட முதியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் பே.இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.