மதுரை பெரியார்நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சாத்தூர் புனித ஸ்தானிஸ்லாஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 1987-89 ல் பயின்ற மாணவர்கள் 38 ஆண்டுக்கு பின் சந்தித்து பயின்ற காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் ஜஸ்டின், ஜேம்ஸ், ரிச்சர்டு அந்தோணிசாமி அந்தோணி, ஆல்பர்ட் ஜேம்ஸ் உட்பட முன்னாள் மாணவகளான ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்,காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு பகுதியில் உள்ள ஆர்.சி. தொடக்கபள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இருதயஜெரால்டுஅன்புஅமுதன் க்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சக ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்தினர்.

You must be logged in to post a comment.