கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் ரயில் விபத்து! கொழுந்து விட்டு எரியும் தீ! பல்வேறு முக்கிய ரயில்கள் நிறுத்தி வைப்பு..

திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் ரயில் தீப்பற்றி எரிந்த விபத்தினால், சென்னை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்படும் ரயில்கள் என தெற்கு ரயில்வே குறிப்பிட்டவை

சென்னை – மைசூரு வந்தே பாரத் (20607)

சென்னை – மைசூரு சதாப்தி (12007)

சென்னை – கோவை இன்டர்சிட்டி (12675)

சென்னை – கோவை சதாப்தி (12243)

சென்னை – திருப்பதி சப்தகிரி (16057)

சென்னை – பெங்களூரு செல்லும் ரயில்கள் (22625, 12639)

சென்னை – மகாராஷ்டிரம் நாகர்சோல் (16003)

இதுதவிர, சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் என 15 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது திருவள்ளூர் ரயில் நிலையம் மேம்பாலம் கடக்கும் போது ரயில் டீசல் என்ஜின் தடம் புரண்டது. கச்சா எண்ணெய் டேங்கரில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.

இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்து 7 டேங்கர்களில் தீ மளமளவென பரவியது. ஒவ்வொரு டேங்கரிலும் 7,000 லிட்டர் கச்சா எண்ணெய் கொள்ளளவு இருந்துள்ளது. இருப்பினும், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!