கீழக்கரையில் ஆப்செட் உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம்…….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று (12/11/2020) துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் கீழக்கரை சரகத்திற்கு உட்பட்ட ஆப்செட் அச்சகம் உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தேர்தல் நெருங்குவதால் பத்திரிக்கை, வால் போஸ்டர், நோடிஸ், பிளக்ஸ் போன்ற விளம்பரம் பிரசுரம் அடிக்கும் போது அச்சகத்தின் பெயர் மட்டும் அச்சக உரிமையாளர் தொலைபேசி எண் கட்டாயம் அந்த பிரசுரத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நோடிஸ் போன்ற விளம்பரங்கள் அடிக்க வரும் வாடிக்கையாளர்களிடம் முழு முகவரியை பெற்று வைத்து கொள்ள வேண்டும் என்றும். மதம் சாதி அரசியல் கட்சிகளை கொச்சைப் படுத்தும் வகையில் வார்த்தைகள் இடம் பெறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது உடன் கீழக்கரை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!