ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் கெட்டுப்போன மீன்கள் வியாபாரம் செய்வதாக வந்த புகாரியின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் மீன்வள ஆய்வாளர் சாகுல் ஹமீது. சாகர் மித்ரா பணியாளர் இலக்கிய வேந்தன் ஆகியோர் இணைந்து பெரியபட்டினம் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கெட்டுப்போன மீன்கள் சுமார் 11 கிலோ கண்டறியப்பட்டு அவற்றை பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டது. மேலும் மீன் விற்பனை செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கெட்டுப் போன மீன்களை வியாபாரம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடிக்கடி ஆய்வு நடைபெறும் என்றும் தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.




You must be logged in to post a comment.