கடலாடியில் அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை பேரவை கூட்டம்..

கடலாடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை பேரவை ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கத்தில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவனுபூவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சரவணக்குமார் வரவேற்றார். வட்டாரச் செயலாளர் பாலமுருகன் வேலை அறிக்கை வாசித்தார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின்  மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், கடலாடி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொருளாளர்  குருசாமி , வட்டாரச் செயலாளர் முருகானந்தம்,  தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி , மேல்நிலைப்பள்ளி  பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் துணைத் தலைவர் டொமினிக் அருள்ராஜ் , ஸ்டீபன் , டக்ளஸ் ஆகியோர் பேரவையை வாழ்த்திப் பேசினார்கள்.  அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சேகர்  சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில்  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்.  21 மாத ஊதிய  நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். பட்டம் பெற்ற இளநிலை உதவியாளர் களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு …..தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள  உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். பவானி சாகர் அடுத்து பட்டை பயிற்சி .., தகுதிகாண் பருவ ஆணை ஆகியவற்றை கால தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். …..போராடும் சங்கங்களின் மாநில நிர்வாகிகளை அரசு அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும். தவறும் பட்சத்தில் ஜாக்டோ- ஜியோ மாநில மையத்தின் முடிவின்படி போராட்டங்களும் காண்பது…உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தின் .மாவட்டச் செயலாளர் சேகர் சிறப்புரையாற்றி புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்திப்பேசினார். வட்டக்கிளை துணைத்தலைவர் பாபு நன்றி கூறினார். கல்வித்துறை நிர்வாகம்  அலுவலர் சங்கம். ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்துறை , சத்துணவு , அங்கன்வாடி ,பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து துறைகளையும் சேர்ந்த சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!