திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மறைவிற்கு இராமநாதபுரம் மாவட்த்தின் பல இடங்களில் தி.மு.க., காங்., உள்ளிட்ட கட்சிகள் அமைதி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் கருணாநிதி மறைவிற்கு இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அதிமுக சார்பில் அஞ்சலி தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் MGRன் 40 ஆண்டு கால நண்பருக்கு கண்ணீர் அஞ்சலி தெரிவித்து வைத்துள்ள பிளக்ஸ் போர்டில் MGR , கருணாநிதி, ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றுள்ளன. இணக்கமான அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்துவதாக நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.


You must be logged in to post a comment.