கீழக்கரையில் காஷ்மீர் வீரர்களுக்காக மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி..

காஷ்மீரில் நேற்றைய தினம் (14/02/2019) தீவிரவாத செயலால் கொல்லப்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் அனைத்து தர்ப்பு மக்களும் கண்டனத்தை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று (15/02/2019) இன்று கீழக்கரைநில் இன்னுயிர் ஈந்த எம் இந்திய துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக கட்சியை சார்ந்த  ஹமீது சுல்தான் தலைமையில் கீழக்கரையில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி இரங்கலை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மக்கள் டீம் காதர், கிழக்குத் தெரு ஜமா அத் துணை தலைவர் அஜிஹர்,  இஃப்திகார் ஹசன், கபீர் இன்ஜினியர், சுஜபு, லெப்பை தம்பி,ராசிக்தீன், யாசீன், சுபியான், டிராவல்ஸ் ஜீவா மற்றும் பல கீழக்கரை பெருமக்கள் கலந்து கொண்டனர்.

பேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், “இச்சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!