தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கே.சிவப்பிரகாஷ் மறைவு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் இரங்கல்..

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளராகவும், மாநில துணைத்தலைவராகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றிய திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேனிலைப்பள்ளின் தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றி 2017ல் பணி ஓய்வு பெற்றவருமான கே.சிவப்பிரகாஷ் இன்று 15.01.2019 பகல் 12.30 மணியளவில் திருவண்ணாமலையில மறைந்தார் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்ட தலைவர் செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது…. திருவண்ணாமலை டேனிஷ் மேனிலைப்பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் அவரின் சீரிய பணியை பாராட்டி தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கியவர். முனைப்பான செயல்வீரர், இரவு பகல் பாராமல் இயக்க செயல்பாட்டிற்காக தன்னை அற்பணித்தவர். தனது பணிநிறைவு பாராட்டு விழாவில் பிரியா விடைபெறுகிறேன் என்று பிளக்ஸ் பேனர் மூலம் தெரிவித்தவர். அன்னாரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். நாளை 16.01.2019 அன்று 71, கட்டபொம்மன் தெரு, டேனிஷ் மேனிலைப்பள்ளி எதிரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்குள் நடைபெறும்.

தொடர்புக்கு:- (செ.நா.ஜனார்த்தனன், மாநில பொதுச்செயலாளர், 9443345667)

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!