திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை காவலர்கள் ஏற்றுக்கொண்டனர். நெல்லை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் தலைமையில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தனுசியா மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் தேசிய ஒற்றுமை நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என்று உறுதிமொழி ஏற்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.