இந்தியா முழுவதும் கொரொனா தொற்று நோய் பரவும் நிலையில், அதற்கான மருத்துவ தீர்வும் இல்லாத நிலையில் கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் உயர்த்தும் வண்ணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் தங்ககிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி செயலாளர் வாசிம் அக்ரம்,துணைத்தலைவர் யாசர், இணைச்செயலாளர் ஆதில், துணைச்செயலாளர்- சபரி, பொருளாளர்-சாகுல் ஹமிது மற்றும் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.





You must be logged in to post a comment.