13 வருஷத்துக்கு முன்னாடி விஜயை போல் இதே கோவத்தோடு தான் நானும் வந்தேன். ஆனால் அவருடைய கொள்கையும் என்னுடைய கொள்கையும் ஒத்து போகவில்லை சீமான் பேட்டி..

13 வருஷத்துக்கு முன்னாடி விஜயை போல் இதே கோவத்தோடு தான் நானும் வந்தேன். ஆனால் அவருடைய கொள்கையும் என்னுடைய கொள்கையும் ஒத்து போகவில்லை சீமான் பேட்டி..

நான் தனித்து தான் போட்டியிடுவேன்.. என்னுடைய பயணம் உறுதியானது..! நீங்கள் பெரியாரை ஏற்றுக்கொள்வதால் திராவிடத்தையும் ஏற்கிறீர்கள்..! நாங்க அது திருட்டு மாடல், தீஞ்சி போன மாடல் என்கிறோம்.. விஜய் குறித்து சீமான் கருத்து.

திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் கூறியுள்ளார், இது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது.

நாதகவின் கொள்கை தமிழ் தேசம்;

திராவிடக் கொள்கை வேறு, தமிழ் தேசியக் கொள்கை வேறு;

இது என் நாடு, என் மக்கள், இங்கு நடைபெறும் அரசியல் தமிழ் தேசிய அரசியல்;

தெலுங்கு தேசம் என கட்சி தொடங்கி போது எதிர்ப்புகள் வரவில்லை, நாங்கள் தமிழ் தேசம் என கூறினால் எதிர்ப்புகள் வருகிறது;

எங்களுக்கு மொழி கொள்கையிலும் முரண்பாடுகள் உள்ளன”

தவெக தலைவர் விஜய்யை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்;

நான் என் கால்களை நம்பி பயணிக்க கூடியவன், அடுத்தவர்கள் கால்களை நம்பி பயணிக்க மாட்டேன்;

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என தெளிவாக கூறிவிட்டேன்”

-நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!