மெல்ல மெல்ல பசுமை இழந்து வரும் தமிழக மாவட்டங்களில் நாகை மாவட்டம் ஒன்று. இப்பொழுதெல்லாம் மழை அந்தக் காலத்தைப் போல வந்து எட்டிப் பார்ப்பது கிடையாது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நாகை மாவட்டத்தில் மூன்று நான்கு மணி நேரங்களாக தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது .இது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .நாகை மாவட்டத்திலும் நீர் தட்டுப்பாடு உண்டு. விளைநிலங்கள் அந்த அளவுக்கு இல்லை .ஆனால் இப்படி பெய்யும் மழையின் வருகை அடிக்கடி இருக்குமென்றால் நாகை மாவட்டம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் பெறும் என்பது அப்பகுதி மக்களின் மகிழ்ச்சி கலந்த செய்தியாக உள்ளது. இயற்கையிடம் மழை கேட்பது மட்டுமில்லாமல் அந்த மழையை மண்ணிற்கு வரவைக்க அவனால் என்ன செய்ய முடியுமோ அதை ஒவ்வொரு மனிதனும் செய்வானாயின் நிச்சயமாக இயற்கை அதற்கான பிரதிபலனை இந்த பூவுலகில் தூவிவிட்டுத்தான் செல்லும் என்பதில் ஐயமில்லை. மென்மேலும் வளம் பெற நம்மால் இயன்றதை இப்பூமிக்கு செய்து இறைவனிடம் பிரார்த்திப்போம்.


You must be logged in to post a comment.