கீழக்கரை வடக்குத் தெரு மணல்மேடு பகுதியில் கடந்த மாதம் மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று காவிரி குடிநீர் செல்லும் ஜங்க்சன் மூடி மீது ஏறி சேதமடைந்தது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படும் வகையில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது.

இது சம்பந்தமாக பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்திருந்தார்கள். நம் கீழைநியூஸ் இணையதளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
கீழக்கரை மணல் மேடு அருகே மூடியில்லாத அபாய குழி – வாகன ஓட்டிகள் உஷார்..

இன்று நகராட்சி ஆணையர் தலைமையில் பள்ளம் சரி செய்யப்பட்டு, மீண்டும் சேதமடையாத வகையில் கனமான மூடி போட்டு சரி செய்யப்பட்டுள்ளது. அத்தெரு மக்கள் சார்பாக நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


கீழக்கரை நகராட்சிகு என் மனமார்ந்த நன்றி