செவிடன் காதில் சங்கு ஊதினால் கூட விளங்கி விடும். ஆனால் கீழக்கரை நகராட்சிக்கு மட்டும் செவியிருந்தும் விளங்காத நிலைதான். வடக்குத் தெரு CSI பள்ளி அருகாமையில் வசிக்கும் பொது மக்கள் உண்மையிலேயே பாவம் செய்தவர்கள் தான் போலும். வடக்குத் நெரு நபர் சேர்மனாக இருந்த காலத்திலும் சரி, இன்று சொந்த செலவில் தெருவை சுத்தம் செய்யும் அரசியல்வாதிகள் இருந்தும் இந்த தெருவின் அவல நிலை மட்டும் யாருடைய கண்ணுக்கும் தெரிவதில்லை. இது சம்பந்தமாக நம்முடைய இணையதளத்தில் செய்தியும் வெளியிட்டு இருந்தோம்.
கீழக்கரையில் தொடரும் அவலம்.. சாக்கடை பெருகெடுத்து ஓடும் சி.எஸ..ஐ பள்ளி பின்புறம்..

கீழக்கரை சட்டப்போராளிகள் மூலமாக வாருகால் மூடிகள் போடும் விசயத்தில் நடந்த குளறுபடி சம்பந்தமாக தகவல் அறியும் சட்டம் மூலம் விபரங்கள் பெற்று இணையதளம் மூலம் பொதுமக்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது. அதன் மூலம் நகராட்சியின் செவி கேட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு அதிகாரிக்கும் இன்று வரை காதும் கேட்கவில்லை, செவியும் கேட்கவில்லை. சட்டப் போராளிகளால் தொடர்ந்து மேல் முயையீடு செய்யப்பட்டு வருகிறது.
கீழக்கரை சட்டப்போராளிகளின் சட்டப்போராட்டம் துவக்கம்.. வாருகால் மூடிகள் எண்ணும் பணி தொடங்கியது..

ஆனால் நகராட்சியின் செயல்பாடுகளோ விசித்திரமானது, ஒரு புறம் சுகாதார விழிப்புணர்வு முகாம்கள், மறுபறம் கண்ணுக்கெதிரே உள்ள சுகாதாரக் கேட்டை சீர் செய்ய முன் வருவதில்லை. ஆக எப்படி ஒழியும் மர்ம காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும். இந்த சுகாதாரக் கேடு உயிர் பலி வாங்கும் முன்பு விழித்துக் கொள்ளுமா?? மக்கள் சுகாராரக் கேட்டில் இருந்து பாதுகாக்கப் படுவார்களா?? அல்லது இதற்கும் மக்கள் வீதியில் இறங்கி போராடினால் தான் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்…
கீழக்கரையில் தரமற்ற சாக்கடை மூடிகளால் வீணாகும் மக்கள் பணம்..


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









