புறக்கணிக்கப்படும் வடக்குத் தெரு 19,20 வார்டு பகுதி.. நகராட்சி நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பும் அவல நிலை…

கீழக்கரையில் தற்போதைய சூழலில் நகராட்சியில் நேரடியாக சென்று மனு கொடுத்தாலே சிரமத்துடன் பணிகள் நடக்கும் நிலைதான் உள்ளது. நகராட்சியின் பணியே மக்களின் நேரடியாக கண்டறிந்து பொதுமக்களின் சுகாதாரத்தை பேணும் நிலை மாறி, பொதுமக்கள் அவர்களுடைய பணிகளை செய்ய வற்புறுத்தும் சூழலாக மாறிவிட்டது.

கீழக்கரை வடக்குத் தெரு தைக்கா அருகில் உள்ள பெண்கள் தொழுகைப் பள்ளி அமைந்திருக்கும் பகுதியில் கடந்த பல மாதங்களாக சாக்கடை நீர் அடைத்து தொழுகை பள்ளிக்குள் செல்லும் அபாய நிலையில் உள்ளது. இந்த பிரதான சாலை வழியாகத்தான் நகராட்சி ஆணையர் முதல் அதிகாரிகள் வரை கடந்து செல்கிறார்கள், ஆனால் அவர்களுடைய கண்களுக்கு இந்த அவலங்கள் தெரியாததுதான் ஆச்சரியமான விசயம்.

கீழக்கரையில் டெங்கு சோதனை என்ற பெயரில் அதிகாரிகளுக்கு கணக்கு காட்டும் நோக்கத்தோடு பல்லாயிரம் அபராதம் விதித்த நகராட்சிக்கு இன்று மக்களின் சுகாதாரத்தோடு விளையாடுவதற்கு யார் அபராதம் விதிப்பது? எத்தனை லட்சங்கள் அபராதங்கள் விதிப்பது?. உறங்கி கொண்டிருக்கும் நகராட்சி விழிக்குமா??

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!