வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள்!- இனி கடைசி பென்ச் கிடையாது: தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவு..

கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் ‘ப’ வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் என்பது கிடையாது. மாணவர்களை ‘ப’ வடிவில் அமர வைப்பதன் மூலமாக அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கும், மாணவர்கள் ஒருவரையொருவர் பார்க்க, ஆசிரியரைக் கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் சமீபத்தில் வெளியான ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற திரைப்படம் கடைசி இருக்கையில் அமர்வதால் கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகக் கூறியதை அடுத்து கேரளத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் இருக்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவர்கள் வரிசையாக அமர்வதற்கு பதிலாக அரைவட்ட வடிவில் அல்லது ‘ப’ வடிவில் அமர வைக்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் தற்போது மாணவர்களை ‘ப’ வடிவில் அமரவைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!