அதிமுக – திமுக ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வாக்குகள் சேகரித்ததால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதால் நிறம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் வாக்குகள் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் நேற்று 24.12.2019 மதியம் சுமார் 3 மணி அளவில் அதிமுக 23வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி க்கும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 16 வது வார்டில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சாத்தாவுக்கும் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் தலைமையிலும், நிலக்கோட்டை அ தி மு க ஒன்றிய செயலாளர் யாகப்பன் முன்னிலையிலும் அணைப்பட்டி யில் உள்ள பஸ் நிலையம் முன்பு 100க்கு மேற்பட்டவர்கள் நின்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென திமுக கட்சி 16வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அறிவழகன் என்ற சின்ன மாயனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். அதில் சில இளைஞர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டிய கோஷங்கள் எழுப்பினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் உடனடியாக சென்று திமுகவைச் சேர்ந்த வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களை உடனடியாக அப்பகுதியில் இருந்து கலைந்து செல்லும்படி வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் திமுகவினர் தொடர்ந்து வாக்குகள் சேகரித்தனர். நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திமுக அவரை சற்று விலகி இருக்கும்படி எச்சரித்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!