நிலக்கோட்டை பகுதியில் வெங்காயம் அறுவடை பணி தீவிரம். மகசூல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஆண்டிபட்டி , மிளகாய் பட்டி, தோப்புப்பட்டி, தம்பி நாயக்கன்பட்டி , செங் கட்டாம்பட்டி .சீத்தாபுரம் , பிள்ளையார்நத்தம், சிலுக்குவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெய்த மழையின் எதிரொலியாக ஏராளமான விவசாயிகள் வெங்காயம் பயிர் சாகுபடி செய்தனர்.அப்படி வெங்காய பயிர் சாகுபடி செய்ததில் வெங்காயத்தில் இந்த ஆண்டு மட்டும் வகையான வெம்பா நோய் தாக்கப்பட்டு ஏராளமான பயிர்கள் வெள்ளை நிறமாக கருகிப் போனது. இருப்பினும் ஒரு சில இடங்களில் அதற்கு அதிகப்படியான மருந்துகளை தெளித்து நுண்ணுயிர்களை கொடுத்தும் சில இடங்களில் வெங்காயம் பயிர்கள் வளர்ந்து வந்தன.இதனால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்த வண்ணம் விலைவாசி இருப்பது காரணமாக வெங்காயம் நன்றாக விளைந்து இருக்கும் என எண்ணி கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெங்காய பயிர்களை அறுவடை செய்து வருகிறார்கள். ஆனால் வெங்காய பயிர்கள் அறுவடை செய்யும்போது சுமார் 100 மூட்டை வரக்கூடிய இடத்தில் வெறும் 10 மூடை டிமே அதுவும் எதிர்பார்த்த அளவில் காய்கள் சிறப்பாக இல்லை இல்லாமல் இருப்பதைப் பார்த்த விவசாயிகள் மிகுந்த வருத்தமும் கண்ணீர் வடித்தனர்.இது குறித்து சில விவசாயிகள் ஒருபுறம் நன்றாக விளைந்தால் விலைவாசி இல்லாமல் போய்விடுகிறது. சில நேரம் இயற்கையின் பேரழிவு காரணமாக இப்படி வெங்காயம் விலைவாசி இருந்தும் வறுத்து மிக மோசமாக இருப்பதால் செலவு செய்த அளவுக்குக்கூட சாய பயிர்கள் வந்து கை கொடுக்கவில்லை என மிகுந்த வேதனை தெரிவித்தனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!